லிஃப்ட் கொடுப்பதாக கூறி.. தாய், 6 வயது மகள் கூட்டு பாலியல் வன்கொடுமை.. கொடூர சம்பவம்.! - Seithipunal
Seithipunal


ஓடும் காரில் பெண் மற்றும் அவரின் 6 வயது மகளும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவார் மாவட்டம் பிரையன் கலியர் பகுதியை சேர்ந்த பெண் நேற்று இரவு தனது 6 வயது மகளுடன் வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்தார்.

அப்போது சோனு என்ற நபர் தனது காரில் லிப்ட் கொடுப்பதாக அந்தப் பெண்ணிடம் கூறியுள்ளார். அதனை நம்பி அந்தப் பெண்ணும் தனது மகளுடன் காரில் ஏறியுள்ளார். அந்த காரில் ஏற்கனவே சோனுவின் நண்பர்கள் இருந்துள்ளனர்.

இதையடுத்து ஓடும் காரில் அந்தப் பெண்ணையும் அவரின் ஆறு வயது மகளையும் காரில் இருந்தவர்கள் அனைவரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதன்பிறகு ஓடும் காரிலிருந்து இருவரையும் ஆற்றங்கரை அருகே தள்ளிவிட்டனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட அந்த பெண் நடந்த சம்பவம் பற்றி போலீசில் புகார் அளித்தார்.

அந்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர். தற்போது பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணும் அவரின் மகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Claiming to give lift Mother, 6 year old daughter gang-raped


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->