உ.பியில் பயங்கரம் - இடைத்தேர்தலில் இருதரப்பினரிடையே மோதல்.! - Seithipunal
Seithipunal


உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள மீராபூர் சட்டமன்ற தொகுதியில் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், காக்ரோலி கிராமத்தில் வாக்குப்பதிவின்போது திடீரென இரு தரப்பினர் இடையே மோதல் வெடித்து, ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிலைமையை கட்டுக்குள் வந்தனர். இருப்பினும் பாதுகாப்பு கருதி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இதற்கிடையே மீராபூரில் மக்களின் எதிரிபோன்று காவல்துறை செயல்படுவதாகவும், மக்கள் வீடுகளை விட்டு வெளியேற விடாமல் தொந்தரவு செய்வதாகவும் மஜ்லிஸ் கட்சி வேட்பாளர் முகமது அர்ஷத் குற்றம்சாட்டினார். 

இதேபோல், வாக்காளர் அடையாள அட்டைகளை சரிபார்க்கிறோம் என்ற பெயரில் மக்களை வாக்களிக்க விடாமல் போலீசார் தடுப்பதாக சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் சம்புல் ராணா குற்றம்சாட்டினார். இதனால், மீராபூர் தொகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

clash in uttar pradesh by election


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->