#Video: மசூதிக்குள் தேங்காய் உடைத்து பூஜை.. தசரா ஊர்வலத்தில் அரங்கேறிய சம்பவத்தால் பரபரப்பு.!  - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள பிடர் மாவட்டத்தில் தசரா ஊர்வலம் நடைபெற்றுள்ளது. அப்பொழுது அங்கிருந்த மசூதி ஒன்றில் தசரா ஊர்வலத்தில் ஈடுபட்ட நபர்கள் அத்துமீறி நுழைந்து பூஜை அரங்கேற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிடர் பகுதியில் அமைந்துள்ள மசூதி வழியாக தசரா ஊர்வலம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்பொழுது சிலர் அத்துமீறி மசூதிக்குள் நுழைந்து குங்குமம் தூவி, தேங்காய்களை உடைத்து பூஜை செய்துள்ளனர்.

இந்த செயலை அவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளனர். இதனை தொடர்ந்து, இந்த வீடியோவை அடிப்படையாகக் கொண்டு போலீசார் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்த நிலையில் நான்கு பேரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மத நல்லிணக்கத்திற்கு உதாரணமாக திகழும் இந்தியாவில் இப்படி அத்துமீறி மத கலவரத்தை ஏற்படுத்த முயற்சித்த சமூக விரோதிகளுக்கு தற்போது கண்டனங்கள் குவிந்து வருகிறது. பிற மதத்தவரின் உணர்வுகளை மதித்து சகோதரர்களாக வாழும் இந்தியர்களுக்குள் குண்டு வைக்கும் விதமாக இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cocunut brokes In masoodi Of Karnataka


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->