நாளை மறுநாள் சென்னை கடற்கரையில் மீன் பிடிக்கத் தடை - காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


நாளை மறுநாள் சென்னை கடற்கரையில் மீன் பிடிக்கத் தடை - காரணம் என்ன?

வருகிற ஆகஸ்ட் 15-ந்தேதி (நாளை மறுநாள்) இந்தியா தனது சுதந்திர தினத்தைக் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு சென்னையில் பிரமாண்டமாக சுதந்திர தின விழா கொண்டாடப்படவுள்ளது. இந்த விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றி வைக்க உள்ளார். 

இதற்காக சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்போடப்பட்டுள்ளன. இந்த நிலையில் சென்னை கடற்கரை பகுதியில் சுதந்திர தினத்தன்று ஆகஸ்ட் 15-ந்தேதி மீன்பிடிக்கத் தடை விதித்து மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது. 

இது தொடர்பாக அனைத்து மீன்வளத்துறை உதவி இயக்குனர் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு உரிமையாளர் சங்கங்கள், மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், "பாதுகாப்பு காரணங்கள் கருதி, ஆகஸ்ட் 15-ந்தேதி சுதந்திர தினத்தன்று காலை 4 மணி முதல் 10 மணி வரை சென்னை துறைமுகம் முதல் பெசண்ட் நகர் வரை கரையிலிருந்து 5 கடல் மைல் தொலைவுக்கு மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

coming 15 Fishing ban on Chennai beach


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->