தற்குறிகள் நடத்தும் திமுக விடியா அரசு காரணமா? திருச்செந்தூர் கோவில் யானை தாக்குதல் சம்பவத்தில் அதிமுக நிர்வாகி பரபரப்பு டிவிட்!
ADMK Kovai Sathyan Say About Thiruchandur Elephant attack DMK Govt MK Stalin
திருச்செந்தூர் முருகன் கோவில் யானை தெய்வானை தாக்கியதில், யானையின் பாகன் உதயன் மற்றும் அவரின் உறவினர் சிசுபாலன் இருவரும் படுகாயம் அடைந்து உயிரிழந்தனர்.
இருவரும் யானைக்கு பழங்கள் கொடுத்துக் கொண்டிருந்தபோது, திடீரென ஆக்ரோஷமான யானை இருவரையும் தாக்கி உள்ளது. இதில் படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் இருவரும் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதிமுகவை சேர்ந்த கோவை சத்தியம், அதிமுக அரசு கொண்டு வந்த யானைகள் புத்துணர்ச்சி முகாம் திட்டத்தை திமுக அரசு நிறுத்தியது இதற்கு காரணமாக இருக்கலாம் என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து அவரின் செய்தி குறிப்பில், "பிரபலமான விலங்கியல் மருத்துவருர் யானை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் அறிவுரையை ஏற்று தமிழகத்தில் கோவில் யானைகளால் எந்த அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க யானைகளுக்கான புத்துணர்வு முகாம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் என அதிமுக அரசால் திட்டம் தொடங்கப்பட்டது (2003).
முதுமலை யானைகள் புத்துணர்வு முகாம் என்பது தமிழ்நாட்டிலுள்ள கோயில் யானைகளின் உடல் மற்றும் மனம் சார்ந்த உளைச்சலைப் போக்கி, அவை ஓய்வெடுக்கவும், தெம்பு பெறவும், மருத்துவ கவனம் பெறவும் வாய்ப்பளிக்கின்ற ஏற்பாடு ஆகும். இந்து சமய அறநிலையத் துறை சார்பில் யானைகள் நல வாழ்வு முகாம் 2003-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. எதிர்ப்பார்த்ததைவிட இது மிகப்பெரிய அளவில் பலன் கொடுத்தது.
முகாம்களில் போதுமான ஓய்வு, பழங்கள், காய்கறிகள், கரும்பு, சிறுதானியங்கள், வெல்லம் போன்ற இயற்கையான சத்துப் பொருட்கள் வழங்கப்படுவதோடு, கால்நடை மருத்துவர்களின் முறையான பரிசோதனைக்கும் உட்படுத்தப்படுகின்றன. இதனால் இந்த முகாம்கள் முடிந்த பின்னர் யானைகள் புத்துணர்வுடன் காணப்பட்டன.
2003 முதல் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை யானைகளுக்கு புத்துணர்வு முகாம் தமிழக அரசால் நடத்தப்பட்டது.
100 கோடியில் எழுதாத பேனாவிற்கு நடுக்கடலில் பேனா சிலை வைக்கிறவர்கள் 2021 மே மாதம் ஆட்சிக்கு வந்த பிறகு கோவில் யானைகளுக்கு புத்துணர்ச்சி முகாம் நடத்த நிதியில்லாமல் இத்திட்டம் நின்றுவிட்டது.
இதற்கு யானை காரணமா அல்லது மக்கள் வரிப்பணத்தை வெத்து விளம்பரத்திற்கு கோடிகள் செலவு செய்யும் தற்குறிகள் நடத்தும் திமுக விடியா அரசு காரணமா? என்று கோவை சத்யன் கேள்வி எழுப்பியுள்ளார்.
English Summary
ADMK Kovai Sathyan Say About Thiruchandur Elephant attack DMK Govt MK Stalin