பணம் கொடுத்தால் தான் காங்கிரசில் வேட்பாளர் பதவி - முன்னாள் எம்.எல்.ஏ காமினிபா குற்றசாட்டு.!
congrass ex mla kaminiba raththot joined bjp
கடந்த வாரம் இமாச்சல பிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், 182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் மாநிலத்தில் அடுத்த மாதம் ௧ மற்றும் 5 ஆகிய தேதிகளில் இரெண்டுக் கட்டங்களாக பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில், பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி உள்ளிட்ட காட்சிகள் போட்டியிடுகின்றன.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ-வான காமினிபா ரத்தோட் இன்று பாஜகவில் இணைந்துள்ளார். காந்தி நகரில் பாஜக தலைவர்கள் முன்னிலையில் கட்சியில் இணைந்த காமினிபா அதன் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,
"காங்கிரஸ் கட்சியில், பணம் கொடுத்தால் தான் வேட்பாளராக நிறுத்தப்படுகிறார்கள். இதனால் தான் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளதாக தெரிவித்தார்.
ஏற்கெனவே காங்கிரஸ் மூத்த தலைவர் மோகன்சிங் ரத்வா மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏ பகவான் பரத் உள்ளிட்டோர் பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.
English Summary
congrass ex mla kaminiba raththot joined bjp