பிரதமர் மோடி இளைஞர்களை பற்றி சிந்திக்க வேண்டும் - பிரியங்கா வேண்டுகோள்.! - Seithipunal
Seithipunal


இளைஞர்களுக்கு கோடிக்கணக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது 'எக்ஸ்' வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்து இருப்பதாவது:- 

"சில நாட்களுக்கு முன்பு, மும்பையில் பேசிய பிரதமர் மோடி, கோடிக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு அளித்து முந்தைய சாதனைகளை முறியடித்து இருப்பதாக தெரிவித்தார். இன்று அதே மும்பையில் ஒருசில காலியிடங்களுக்காக வேலையில்லாத இளைஞர்கள் கூட்டம் பெருமளவு திரண்டு வந்த வீடியோ 'வைரல்' ஆகியுள்ளது. 

இதற்கு முன்பு, குஜராத்தில் 25 காலியிடங்களுக்காக ஒரு ஓட்டலில் 15 லட்சம் இளைஞர்கள் திரண்டு வந்தனர். இதனால் நெரிசல் போன்ற சூழ்நிலை ஏற்பட்டது. இவற்றையெல்லாம் பார்த்தால், முந்தைய சாதனை நிச்சயமாக முறியடிக்கப்பட்டுள்ளது. 

அதாவது, அதீத வேலைவாய்ப்பின்மை என்ற சாதனை முறியடிக்கப்பட்டது. நாடு சரித்திர வேலைவாய்ப்பின்மையை சந்தித்து வருகிறது. எனவே, வெற்று வாக்குறுதிகள் அளிப்பதையும், திசைதிருப்புவதையும் நிறுத்திவிட்டு, இளைஞர்களை பற்றி சிந்திக்குமாறு பிரதமர் மோடியை கேட்டுக்கொள்கிறேன். 

வயதாகி வரும் இளைஞர்களுக்கு கோடிக்கணக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குமாறு வலியுறுத்துகிறோம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

congrass public secretary priyanga tweet about job to youths


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->