கிராமப்புற ஏழைகளுக்கு பட்ஜெட்டில் எதுவும் இல்லை... காங்கிரஸ் குற்றச்சாட்டு..!! - Seithipunal
Seithipunal


மத்திய பாஜக அரசின் 2023-2024ம் ஆண்டிற்கான முழு மிகநிலை பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். மத்திய அரசின் பட்ஜெட்டை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன.

அந்த வகையில் நேற்றைய செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே "சமீபத்தில் நடைபெறக்கூடிய 4 மாநில சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு இந்த பட்ஜெட்டை மத்திய அரசு தயாரித்துள்ளது.

மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட இந்த பட்ஜெட்டில் ஏழைகளுக்கான திட்டம் எதுவும் கிடையாது. இந்தியாவின் பண வீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஏதுமில்லை.

அதேபோன்று வேலைவாய்ப்பை பெருக்குவது, மத்திய அரசு பணியிடங்களை நிரப்புவது, மகாத்மா காந்தியின் ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் போன்ற வேலைவாய்ப்பு தொடர்பான எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை" என குற்றம் சாட்டியுள்ளார்.

அதேபோன்று மத்திய பட்ஜெட் குறித்து முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சசி தரூர் கூறுகையில் "இந்த பட்ஜெட்டில் ஒரு சில நல்ல விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டம் கிராமப்புற ஏழை தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு, பணவீக்கம் உள்ளிட்டவை குறித்து பட்ஜெட்டில் ஏதும் இடம்பெறவில்லை" என விமர்சனம் செய்து உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress alleges nothing in budget for rural poor


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->