சமூகநீதி காக்க.. "சாதிவாரி கணக்கெடுப்பு" உடனே நடத்த வேண்டும்.. பாஜகவுக்கு காங்கிரஸ் அழுத்தம்..!!
Congress insists on conducting caste wise census
சமூக நீதியை உறுதிப்படுத்தும் வகையில் புதுப்பிக்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு மிகவும் அவசியம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் "கடந்த 2011-2012 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சமூக பொருளாதார மற்றும் சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பின் தரவுகளை மத்திய அரசு வெளியிட வேண்டும். சமூகநீதியை உறுதிப்படுத்தும் வகையில் புதுப்பிக்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு மிகவும் அவசியமாகிறது.
குறிப்பாக ஓபிசி பிரிவினருக்கான தரவுகள் முழுமை அடைய வில்லை. சமூக நீதி மற்றும் அதிகாரம் அளிக்கும் திட்டங்களுக்கு சாதிவாரி கணக்கெடுப்பு நம்பகத்தன்மை வாய்ந்தது. எனவே மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவது மத்திய அரசின் பொறுப்பு.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு இன்னும் மத்திய அரசால் நடத்தப்படவில்லை. எனவே மத்திய அரசு உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்" என அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
நேற்று காங்கிரஸ் கட்சி கர்நாடக மாநிலம் கோளாறில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி 2011 ஆம் ஆண்டு மத்திய அரசு நடத்திய சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Congress insists on conducting caste wise census