முதல் கட்ட விசாரணை தேவையில்லை!!! - ஊழல் தடுப்புக் குறித்து உச்சநீதிமன்றம்...
No need for a first stage investigation Supreme Court on corruption prevention
டெல்லியில் உச்ச நீதிமன்றம் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் தொடர்புடைய வழக்கில் முதற்கட்ட விசாரணைக் கட்டாயமில்லை என்றுத் தீர்ப்பளித்துள்ளது. கர்நாடகாவில் மாநில லோக் ஆயுக்தா போலீசார் அரசு ஊழியர் ஒருவர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வருவாய்க்கு அதிகமாகச் சொத்து சேர்த்தது தொடர்பாக வழக்குப் பதிவு செய்தனர். ஆனால் கர்நாடகா உயர்நீதிமன்றம் இந்த விவகாரத்தில் முதற்கட்ட விசாரணை நடத்தாமல் போலீசார் வழக்கு பதிவு செய்ததாகக் கூறி இந்த வழக்கை ரத்து செய்தது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மாநில அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

நீதிபதிகள் விசாரணை:
இதைத் தொடர்ந்து இந்த மனுவை சந்தீப் மேத்தா, திபாங்கர் தத்தா நீதிபதிகள் விசாரித்த போது, " "ஒவ்வொரு வழக்கிலும் முதற்கட்ட விசாரணையைக் கூறுவதற்குக் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு உரிமையில்லை. ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவுச் செய்யப்பட்ட வழக்குகள் உட்பட சில வழக்குகளில் முதற்கட்ட விசாரணைத் தேவைப்பட்டாலும், குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்படும்போது அத்தகைய விசாரணைக் கட்டாயமில்லை. முதற்கட்ட விசாரணையின் நோக்கம் பெறப்பட்ட தகவலின் உண்மைத் தன்மையைச் சரி பார்ப்பது அல்ல. அதற்கு மாறாக அது ஒரு கைது செய்யக்கூடிய குற்றமா இல்லையா என்பதைத் தீர்மானிக்க மட்டுமே பயன்படும். மேலும் வழக்குத் தொடர்பான ஆதாரத்தை உயர் அதிகாரி ஒருவர் கைப்பற்றினால் அது விரிவானதாகவும் நியாயமானதாகவும் இருந்தால் முதல் பார்வையிலேயே குற்றம் வெளிப்படையாகக் கண்டுபிடிக்கப்பட்டால் முதற்கட்ட விசாரணையைத் தவிர்க்கலாம்.
கர்நாடக உயர் நீதிமன்றம்:
ஆனால் இந்த விவகாரத்தில் முதற்கட்ட விசாரணை நடத்தாததற்காக வழக்கை ரத்து செய்ததன் மூலம் கர்நாடக உயர் நீதிமன்றம் பெரும் தவறு செய்துள்ளது" என்று தெரிவித்தனர். மேலும் இதைத்தொடர்ந்து உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பை ரத்து செய்த நீதிபதிகள், அரசு ஊழியர் மீதான குற்றம் சாட்டப்பட்ட வழக்கை மேற்கொண்டு விசாரிக்க உத்தரவிட்டனர்.
English Summary
No need for a first stage investigation Supreme Court on corruption prevention