ஊர்காவல் படை தேர்வு முறைகேடு விவகாரம்..புதுச்சேரி அரசை கண்டித்து மாணவர்கள் கூட்டமைப்பு தீர்மானம்.!
Home Guard Recruitment Scam Students Federation condemns Puducherry govt
ஊர்காவல் படை தேர்வு முறைகேடுகள் தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக தொடர்ந்து பல்வேறு பொய்களை கூறி வழக்காடி வரும் புதுச்சேரி அரசை கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது என புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு தீர்மானம் நிறைவேற்றியது.
ஊர்காவல் படை தேர்வு முறைகேடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் பெரியார் படிப்பகத்தில் புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவன தலைவர் சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நீதி கேட்டு உயர் நீதிமன்றத்தில் போராடிவரும் வழக்காடிகள் பலர் கலந்து கொண்டனர் கூட்டத்தில் அடுத்த கட்ட நகர்வு தொடர்பாக பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன முதற்கட்டமாக நான்கு தீர்மானங்களை இக்கூட்டம் நிறைவேற்றியது,
1) உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக தொடர்ந்து பல்வேறு பொய்களை கூறி வழக்காடி வரும் புதுச்சேரி அரசை கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது
2) உயர் நீதிமன்றத்தில் நடக்கும் ஊர்க்காவல் படை தேர்வுக்கு எதிரான வழக்கின் தன்மைகள் மற்றும் அடுத்த கட்ட நகர்வு தொடர்பாக வருகின்ற புதன்கிழமை மாலை அனைத்து கட்சி சமூக இயக்கங்களின் ஆலோசனைக் கூட்டம் நடத்தி அடுத்த கட்ட நகர்வு தொடர்பாக அறிவுரை பெறுவது என இக்கூட்டம் முடிவு செய்துள்ளது
3) வருகின்ற வியாழன் அன்று மாண்புமிகு முதல்வர் மற்றும் அமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து இப்பிரச்சினை தொடர்பாக எடுத்துரைப்பது என இக்கூட்டம் முடிவு செய்தது
4) ஊர்க்காவல் படை தேர்வு முறைகேடு தொடர்பாக மாபெரும் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துவதென இக்கூட்டம் முடிவு செய்துள்ளது
உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றியது என புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு
நிறுவனர் சீ.சு.சுவாமிநாதன் கூறியுள்ளார்.
English Summary
Home Guard Recruitment Scam Students Federation condemns Puducherry govt