வேகமெடுக்கும் கொரோனா: கடந்த 24 மணி நேரத்தில் 636 பேருக்கு தொற்று உறுதி! - Seithipunal
Seithipunal


நாட்டின் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 636 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கொரோனா பாதிப்பு காரணமாக கேரளத்தில் இரண்டு பேரும் தமிழகத்தில் ஒருவரும் என 3 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சராக தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மே மாதம் 19 ஆம் தேதி இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 865 ஆக பதிவாகி இருந்தது. அதன் பிறகு குறைய தொடரும் தொடங்கிய கொரோனா பாதிப்பு மீண்டும் இரட்டை இலக்கத்தில் பாதிப்புகள் அதிகரித்து வந்தது. 

இந்நிலையில் உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனாவின் புதிய திரிபன ஜே என்1 தோற்று பரவி வருகிறது. இந்த வகை கொரோனா இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. 

குளிர்கால எதிரொலியாக நாட்டில் புதிய வகை கொரோனா கடந்த மாதம் தொடக்கத்தில் இருந்து அதிகரித்து வருகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு தொடக்கத்தில் கொரோனா பரவி இதுவரை நாட்டில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4.5 கோடியாக உயர்ந்துள்ளது. 

கொரோனா பாதிப்பு காரணமாக 5.3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக பதிவாகியுள்ளது. இதுவரை நாடு முழுவதும் 220.67 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சக தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Corona confirmed 636 infections last 24 hours


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->