ஒரே நாளில் 355 பேரை தாக்கிய கொரோனா.! 5 பேர் உயிரிழப்பு.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 335 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 1,701 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய சுகாதாரத்துறைசார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்தியாவில் கொரோன தொற்றால் உயிரிழந்தவர்கள் ஜேஎன்.1 என்ற புதிய துணை வகை வைரஸ் தொற்றால் கேரளாவில் 4 பேர் மற்றும்  மத்தியப் பிரதேசத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் மொத்த பாதிப்பு  4.50 கோடியாக உள்ள நிலையில் பாதிப்பில் இருந்து 4.46 கோடி பேர் குணமாகியுள்ளனர். தேசிய அளவில் குணமடைந்தவர்களின் சதவீதம் 98.81ஆகவும், கொரோனா தொற்று உயிரிழப்பு விகிதம் 1.19% ஆக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது..

தமிழகத்திலும் கொரோன தொற்று தொடர்ந்து அடகுஹ்யகரித்து வருகிறது. கடந்த அக்டோபர் 25-ம் தேதி திருச்சியில் இருந்து சிங்கப்பூர் சென்ற தமிழருக்கும் ஜேஎன்.1 வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அனால்  தமிழகத்தில் வேறு எங்கும் பாதிப்புகள் கண்டறியப்படவில்லை. மேலும் இந்தியாவில் வேறு எங்கும் ஜேஎன்.1 புதிய துணை வகை வைரஸ் தொற்றுகள் கண்டறியப்படவில்லை தெரிவிக்கப்பட்டுள்ளது 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Corona struck 355 people in a single day in india


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->