டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவாலுக்கு கொரோனா.. தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக டிவிட்டர் பதிவு..! - Seithipunal
Seithipunal


டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2020 ம் ஆண்டு உலகமெங்கும் தொடங்கிய கொரோனா பெருந்தொற்று பல சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் கொரோனா தலைவிரித்தாடியது.

சில மாதங்களாக தடுப்பூசி செலுத்துதல், தனிமனித இடைவெளியை கடைபிடித்தல் போன்ற நடவடிக்கைகளை போன்றவற்றால் தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்த நிலையில் தற்போது மீண்டும் கொரோனா வேகமெடுத்து பரவ தொடங்கியுள்ளது.

இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.  இதனை அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த சில நாட்களாக தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை மேற்கொண்டு தனிமை படுத்திக்கொள்ள வேண்டும் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Corona to Delhi Chief Minister Arvind Kejriwal


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->