ஓடும் பேருந்தில் இளம்ஜோடி உல்லாசம்: பயணிகள் அதிர்ச்சி!
Couple on a moving bus Passengers shocked
ஓடும் பஸ்சில் இளம்ஜோடி உல்லாசம் அனுபவித்த சம்பவம் மும்பையில் பெரும் அதிர்வலையையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
நவிமும்பை மாநகராட்சி குளிர்சாதன வசதி கொண்ட பஸ் ஒன்று நவிமும்பையை அடுத்த பன்வெலில் இருந்து கல்யாண் நோக்கி சென்று கொண்டு இருந்தது. இந்த பஸ்சில் பயணிகள் சிலர் மட்டுமே இருந்ததாக சொல்லப்படுகிறது.
இந்தநிலையில் இந்த பஸ்சில் பயணம் செய்த சுமார் 20 வயதுடைய இளம்ஜோடி ஒன்று இருக்கையில் படுத்து அத்துமீறியுள்ளது . அதுமட்டுமல்லாமல் ஒருகட்டத்தில், அந்த இளம்ஜோடி தாங்கள் பயணிப்பது பேருந்து என்று கூட பார்க்காமல் இருக்கையிலேயே உல்லாசம் அனுபவித்தனர். அப்போது இதனை கண்டக்டர் கவனிக்கவில்லை என்று தெரிகிறது .இதனிடையே போக்குவரத்து நெரிசலில் சிக்கி ஊர்ந்து சென்ற பஸ்சில்
உல்லாச காட்சியை பார்த்த மற்றொரு பஸ்சில் பயணித்த பயணி ஒருவர் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் இதனை வீடியோவாக பதிவு செய்து, சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வைரல் ஆனது. இந்த வீடியோவை பார்த்த நவிமும்பை மாநகராட்சி அதிகாரிகள் அதிர்ச்சியடைந்து சம்பவத்தன்று பணியில் இருந்த கண்டக்டர், டிரைவரை மாநகராட்சி அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்தனர்.
அப்போது காதல் ஜோடியின் மோசமான நடத்தையை தடுக்க தவறியதாக கண்டக்டரிடம் விளக்கம் கேட்டு, துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டனர். ஓடும் பஸ்சில் இளம்ஜோடி உல்லாசம் அனுபவித்த சம்பவம் மும்பையில் பெரும் அதிர்வலையையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Couple on a moving bus Passengers shocked