தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது...!
Heavy rains accompanied by thunderstorms lashed Thoothukudi and Nellai districts
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையிலும், கடந்த 2 நாட்களாக மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.மேலும், நெல்லை மாநகரில் நேற்று மாலையில் தொடங்கி சுமார் 1 மணி நேரம் பயங்கர இடி-மின்னலுடன் பலத்த மழை கொட்டியது.

மேலும் சூறைக்காற்றும் வீசியதுடன், மாநகரில் பாளை சமாதான புரம், கே.டி.சி. நகர், வண்ணார்பேட்டை, சந்திப்பு, புதிய பஸ் நிலையம், பெருமாள்புரம் பகுதிகளில் பரவலாக பெய்த கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகபட்சமாக 31.20 மிமீ, மணிமுத்தாறு மற்றும் மூலைக்கரைப்பட்டியில் தலா 16 மிமீ மழை பெய்தது.
அதேபோல், தூத்துக்குடி மாவட்டத்திலும் நேற்று மாலையில் இடி-மின்னலுடன் கனமழை கொட்டியது. குறிப்பாக விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது.
திருச்செந்தூர், காயல்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை அதிகபட்சமாக விளாத்திகுளத்தில் 23 மிமீ மழை பெய்தது.மேலும்,புதியம்புத்தூர், சாமி நத்தம்,ராஜாவின் கோவில், ஓட்டப்பிடாரம், சில்லாநத்தம், ஜம்புலிங்கபுரம், தட்டப்பாறை ஆகிய கிராமங்களில் இடி-மின்னலுடன் மிதமான மழை பெய்தது.
English Summary
Heavy rains accompanied by thunderstorms lashed Thoothukudi and Nellai districts