முதல் முறையாக திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட காதல் ஜோடி தற்கொலை - நடந்தது என்ன?
couples sucide hotel in madhya pradesh
முதல் முறையாக திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட காதல் ஜோடி தற்கொலை - நடந்தது என்ன?
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூர் நகரைச் சேர்ந்தவர் கபில் சாகு. இவருக்கும் நிஷா என்ற என்ற பெண்ணுக்கும் திருமணம் செய்வதாக நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், கபில் தனது பெற்றோரிடம் விஜய் நகர் பகுதிக்கு செல்வதாக கூறி விட்டு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் கபில் வீடு திரும்பவில்லை.
இதனால், கபிலின் தந்தை அவரிடம் தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது, அவருடன் இருந்த நிஷா கபிலும், தானும் விஷம் குடித்ததாகவும் தங்களை காப்பாற்றும்படியும், நாங்கள் இருவரும் ஓட்டலில் தங்கி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதைக்கேட்டு, பதற்றமடைந்த கபிலின் உறவினர்கள் எந்த ஓட்டல் என்றுத் தெரியாமல் பல இடங்களில் தேடி இறுதியாக சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர். அங்கு அவர்கள் அறையை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, கபில், நிஷா இருவரும் மயக்கத்தில் கிடந்துள்ளனர்.
காபியின் உறவினர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு இருவரும் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவமனை சார்பில் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
அதன் படி அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரின் உடலையும் மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அதன் பின்னர் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வழக்கமாக திருமணம் செய்வதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தால் காதல் ஜோடிகள் தற்கொலை செய்வார்கள். ஆனால், முதல்முறையாக திருமணத்திற்கு நிச்சயம் செய்யப்பட்ட ஜோடி ஓட்டலில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
couples sucide hotel in madhya pradesh