பாலியல் வழக்கில் பரபரப்பு தீர்ப்பு : பலாத்காரம் செய்தவருக்கே பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்ய உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்..!! - Seithipunal
Seithipunal


கடந்த 2023ம் ஆண்டு கர்நாடகாவைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது மகளை ஒருவர் ஏமாற்றி ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்புணர்வு செய்து விட்டதாக காவல் துறையில் புகார் அளித்திருந்தார். அந்த தாய் கொடுத்த புகாரின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது போக்ஸோ வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

இந்நிலையில் இந்த வழக்கு தற்போது கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதனிடையே இந்த தகாத பாலியல் வன்புணர்வால் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு தற்போது குழந்தை பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி நாகப்பிரசன்னா, இந்த வழக்கில் ஒரு மாறுபட்ட தீர்ப்பை அளித்து வழக்கை முடித்து வைத்துள்ளார். அந்த தீர்ப்பில், "இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தற்போது குழந்தை பிறந்துள்ளதால் அந்த பெண்ணின் நலத்தோடு, பிறந்த குழந்தையின் நலத்தையும் கருத்தில் கொண்டு, குற்றம் சாட்டப்பட்டுள்ள நபரே பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளார். 

இந்த தீர்ப்பின் அடிப்படையில் தற்போது இந்த போக்ஸோ  வழக்கு முடித்து வைக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் பாலியல் வன்புணர்வு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர் தற்போது சிறையில் உள்ளார் என்றும், விரைவில் அவர் சிறையில் இருந்து விடுவிக்கப் படுவார் என்றும் தெரிய வந்துள்ளது. 

இந்நிலையில் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு பாலியல் வழக்கில் ஒரு தவறான முன்னுதாரணமாக அமையும் என்று கண்டனங்கள் எழுந்து வருகின்றன. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Court Ordered The Convict To Marry A Women Who Was a Victim in Rape Case


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->