அதிகரிக்கும் கொரோனா தொற்று.. திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு.! - Seithipunal
Seithipunal


கடந்த 2019 சீனாவில் உருவாகிய கொரோனா வைரஸ் உலக நாடுகளையே ஸ்தம்பிக்க வைத்தது. அதன் பின் கொரோனாவிற்கு தடுப்பூசிகள் கண்டறியப்பட்ட பின் கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்தது.

அதன் பின் உருமாறிய சில அதிகளவு வீரியம் இல்லாத வைரஸ்கள் அவ்வப்போது தோன்றி மறைந்து வருகின்றன. இந்த நிலையில், தற்போது மீண்டும் சைனாவில் உருமாறிய ஒமைக்ரான் பி எஃப் 7 வைரஸ் தனது ஆட்டத்தை துவங்கியுள்ளது.

இதன் காரணமாக அந்நாட்டில் கடுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. மேலும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் இந்த வகை கொரோனா வைரஸ் தனது தீவிரத்தை காட்டி வருகின்றது. இந்த நிலையில் தற்போது, இந்தியாவிலும் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக நடைபெறும். இதனையடுத்து ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதிக்கு வருவார்கள்.

இந்த நிலையில், திருப்பதியில் வரும் ஜனவரி 1ம் தேதி முதல் 11ம் தேதி முதல் வரை சிறப்பு தரிசனம் செய்ய முன்பதிவு செய்வோருக்கு கொரோனா தடுப்பூசி சான்றிதழ் அவசியம் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 

அந்த வகையில், ரூ.300 டிக்கெட் பெரும் பக்தர்கள் தடுப்பூசி சான்றிதழ் கொடுப்பது அவசியம் என்று தெரிவிக்கப்பட்டது. 2 டோஸ் தடுப்பூசி போடாதவர்கள் கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழை தரிசனத்துக்கு வரும்போது கொண்டு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Covid spread devotees negative certificate confirm in Thirupathi


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->