மத்திய அமைச்சர்கள் மீது கிரிமினல் வழக்கு - எத்தனை பேர் தெரியுமா?
criminal case file on 28 union ministers
நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறை நரேந்திர மோடி பதவியேற்றார். அவரது பதவியேற்பு விழா கடந்த 9-ந்தேதி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.
அவருடன் சேர்ந்து 71 மத்திய அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். இந்த நிலையில் புதிய மோடி அரசாங்கத்தின் 28 அமைச்சர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதாக தேர்தல் உரிமைகள் அமைப்பான ஜனநாயக சீர்திருத்த சங்கம் தெரிவித்துள்ளது.
அவர்களில் 19 பேர் மீது கொலை முயற்சி, பெண்களுக்கு எதிரான குற்றங்கள், வெறுப்பு பேச்சு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கடுமையான குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் எட்டு அமைச்சர்கள் மீது வெறுப்பு பேச்சு தொடர்பான வழக்குகளும், 2 அமைச்சர்கள் மீது கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 5 அமைச்சர்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
criminal case file on 28 union ministers