இந்தியாவில் 1,136 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்கு - ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் 1,136 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்கு - ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி.!

இந்தியாவின் ஜனநாயக சீர்திருத்த சங்கம் மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பு மையம் உள்ளிட்ட இரு அமைப்புகளும் இணைந்து, இந்திய நாட்டில் 28 மாநில சட்டமன்றங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் தற்போது பதவியில் இருக்கும் எம்.எல்.ஏ.க்களின் பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்தது. 

அதில், நாற்பத்து நான்கு சதவீத எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளது என்பது தெரியவந்துள்ளது. ஆய்வுக்குட்படுத்தப்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 4,033 எம்.எல்.ஏ.க்களில் 4,001 பேரின் பத்திரங்கள் ஆய்வு செய்யப்பட்டது.

இவர்களில் 1,136 எம்.எல்.ஏ.க்கள் மீது கொலை, கொலை முயற்சி, கடத்தல் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட கடுமையான குற்ற வழக்குகள் இருக்கின்றது. டெல்லியில் 70 எம்.எல்.ஏ.க்களில் 44 பேர் மீதும், பீகாரில் 242 எம்.எல்.ஏ.க்களில் 161 பேர் மீதும், மராட்டியத்தில் 284 எம்.எல்.ஏ.க்களில் 175 பேர் மீதும், தமிழகத்தில் 224 எம்.எல்.ஏ.க்களில் 134 பேர் மீதும், கேரளாவில் மொத்தம் 135 எம்.எல்.ஏ.க்களில் 95 பேர் மீது கிரிமினல் வழக்குகள் தெலுங்கானாவில் 118 எம்.எல்.ஏ.க்களில் 72 பேர் மீதும் கிரிமினல் வழக்குகள் உள்ளன. 

மேலும் இந்த ஆய்வில், மொத்தம் நூற்று பதினான்கு எம்.எல்.ஏ.க்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகள் இருப்பதும், அவர்களில் பதினான்கு பேர் மீது கற்பழிப்பு வழக்கு உள்ளதும் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வில், எம்.எல்.ஏ.க்களின் மீதான குற்றப் பதிவுகள் மட்டுமின்றி அவர்களின் சொத்துகளும் உட்படுத்தப்பட்டன. 

அதில், ஒரு எம்.எல்.ஏ.வின் சராசரி சொத்து மதிப்பு ரூ.13.63 கோடி என்றும், கிரிமினல் வழக்குகள் உள்ள எம்.எல்.ஏக்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.16.36 கோடியாகவும், குற்ற வழக்குகள் இல்லாதவர்களின் சொத்து மதிப்பு ரூ.11.45 கோடியாகவும் உள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

criminal case file on thousand one hundrad and thirty six MLA in india


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->