திருத்தப்பட்ட குற்றவியல் சட்டங்கள்: நடைமுறை தேதி அறிவிப்பு!  - Seithipunal
Seithipunal


மத்திய அரசு, ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்து அமலில் உள்ள 3 குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக புதிய குற்றவியல் சட்டங்களை கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளது. 

அதன்படி பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷியா போன்ற மூன்று திருத்தப்பட்ட குற்றவியல் சட்டங்கள் வருகின்ற ஜூலை மாதம் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இந்த 3 மசோதாக்களை மாற்றும் நோக்கில் இந்திய தண்டனைச் சட்டம், கிரிமினல் குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சான்றுகள் சட்டம் ஆகிய மூன்றையும் முழுமையாக மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிமுகப்படுத்தினார். 

இந்த சட்ட மசோதாக்களுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கடந்த வருடம் டிசம்பர் 25ஆம் தேதி ஒப்புதல் அளித்தார். அதே வேளையில் பாரதிய நியாய சன்ஹிதா சட்ட பிரிவின் 106 (2) ஆவது விதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

criminal laws effect date update


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->