மக்காமிஷி பாடலுக்கு நடனமாடிய நடிகர் ஜெயம் ரவி.! - Seithipunal
Seithipunal


ஜெயம் ரவி நடிப்பில் ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட்டின் எட்டாவது தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்  'பிரதர்'. இந்தப் படத்தில் ஜெயம் ரவியுடன் பிரியங்கா மோகன், நட்டி, பூமிகா, சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ், சீதா, அச்யுத், பிரபல தெலுங்கு நடிகர் ராவ் ரமேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

அக்கா – தம்பி உறவை அடிப்படையாக கொண்டு ஒரு குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து படமானது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இயக்குநர் ராஜேஷும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜும் மீண்டும் இணைந்துள்ளதால் இந்தப் படத்தின் பாடல்கள் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. 

ஒளிப்பதிவை விவேகானந்த் சந்தோஷம் கையாளுகிறார். இப்படம் வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளதால், படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் அதிக கவனம் பெற்றது. இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால், படக்குழுவினர் தீவிர புரமோசன் பணிகளில் இறங்கியுள்ளனர். 

அதன்படி, ராமசந்திர மருத்துவக் கல்லூரியில் படத்தின் புரமோசன் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில், நடிகர் ஜெயம் ரவி கல்லூரி மாணவிகளுடன் 'மக்காமிஷி' பாடலுக்கு நடனமாடிவுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor jayam ravi dance makkamishi song


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->