வெட்கக்கேடு! முழுக்க முழுக்க தோல்வி! தலைகுனிவு! பாஜக தரப்பில் கடும் விமர்சனம்! - Seithipunal
Seithipunal


பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "சென்னையில் விமான சாகஸ நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கான மக்கள் உற்சாகத்தோடு கடற்கரை நோக்கி திரண்டது மகிழ்ச்சி.

ஆனால், அந்த மக்களின் உற்சாகத்தை, ஆர்வத்தை உணராமல் அரசு நிர்வாகம் செயலிழந்து போனதை கண்டு வருத்தம் ஏற்படுகிறது. 

ரயில் நிலையங்களில், பேருந்துகளில், மாநகர சாலைகளில் மக்கள் வெள்ளம் பெருகி வழிந்ததை சென்னை காவல் துறை கணிக்க தவறியது அதிர்ச்சியளிக்கிறது. 

இது முழுக்க முழுக்க உளவுத்துறையின் தோல்வி என்றால் அது மிகையாகாது. திட்டமிடத் தெரியாத அரசு  நிர்வாகம் மக்களின் நாடித்துடிப்பை அறியாது செயல்பட்டிருப்பது வெட்கக்கேடு. 

இறைவன் அருளால் உயிரிழப்புகள் ஏற்படாமல் இருந்த போதிலும், மக்கள் கூட நெரிசலில், போக்குவரத்து நெரிசலில் சிக்கித்தவித்ததை கண்டு மாநகராட்சி நிர்வாகம் தலைகுனிந்து நிற்க வேண்டும். 

அனைத்தையும் தாண்டி, இந்திய விமான படையின் சாகஸங்களை மக்கள் கண்டு ரசித்ததும், நம் விமானப்படையின் பலத்தை உணர்ந்ததும் மிகச்சிறப்பு. 

இனி வருங்காலங்களில் அரசும், காவல்துறையும் விழிப்போடு பணியாற்றி இது போன்ற நிகழ்ச்சிகளில் மக்களுக்கு ஏற்படும் இடர்பாடுகளை முன்னரே அறிந்து ஆவன செய்ய வேண்டும்" என்று நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Narayanan Thirupathy Condemn to TNGovt Chennai Air Show


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->