சர்வதேச விருதுடன் மஞ்சுமல் பாய்ஸ் இயக்குனர் சிதம்பரம்!....இணையத்தில் வைரலாகும் புகைப்படம்! - Seithipunal
Seithipunal


இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் உருவான 'மஞ்சுமல் பாய்ஸ்' திரைப்பத்தில் நடிகர்கள் சவுபின் சாகிர், ஸ்ரீநாத் பாசி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த நிலையில், இந்த படம்   கடந்த பிப்ரவரி  மதம் 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

கொடைக்கானல் குணா குகையை மையப்படுத்தி வெளியான இந்த படம், கேரளாவை விட தமிழகத்தில் பெரும் வெற்றியைப் பெற்று அதிக வசூலைக் குவித்தது.

இதுவரை, தமிழகத்தில் வெளியான மலையாளப் படங்களில் அதிக வசூலைக் குவித்த படம் என்ற சாதனையை 'மஞ்சுமல் பாய்ஸ்' படைத்திருக்கிறது . மேலும் இந்த படம் உலகளவில் ரூ.240 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.

இந்த நிலையில், ரஷியாவிலுள்ள சோச்சி நகரில் கினோ பிராவோ சர்வதேச திரைப்பட விழா  நடைபெற்றது. இந்த விழாவில், "மஞ்சுமல் பாய்ஸ்" திரைப்படம்  திரையிடப்பட்ட நிலையில், ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்றது மட்டுமல்லாமல், சிறந்த இசைக்கான சர்வதேச விருதையும் வென்று அசத்தியுள்ளது. மஞ்சுமல் பாய்ஸ்'  படம் இந்த விழாவில் திரையிடப்படும் முதல் மலையாள படம் என்ற பெருமையை 'பெற்றுள்ளது.

இந்த நிலையில், மஞ்சுமல் பட இயக்குனர் சிதம்பரம் பதிவிட்டுள்ள சமூக வலைத்தள பக்கத்தில், சர்வதேச விருதுடன் இருக்கும் புகைப்படத்தினை பதிவிட்டுள்ளார். தற்போது இதற்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Manjumal boys director chidambaram with an international award photo goes viral on the internet


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->