வங்கி சர்வரை 'ஹேக்' செய்த 'சைபர் க்ரைம்' திருடர்கள் - ஆன்லைனிலேயே ரூ. 16 கோடி திருட்டு..!! - Seithipunal
Seithipunal



நைனிடால் வங்கியின் கிளை ஒன்று நொய்டாவில் உள்ளது. இந்தக் கிளையில் தொடர்ந்து 5 நாட்களாக 84 பணப் பரிவர்த்தனை நடந்துள்ளது. வங்கியில் எவ்வளவு பணம் இருப்பு உள்ளது என்று அதிகாரிகள் சோதனை செய்தபோது தான் இந்த மோசடி நிகழ்ந்துள்ளது தெரிய வந்துள்ளது. 

இதுகுறித்து வங்கியின் ஐடி மேலாளர் சுமித் குமார் ஸ்ரீவஸ்தவா சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் அவர், "ஜூன் 17ம் தேதி முதல் ஜூன் 20ம் தேதி வரை இந்த பண மோசடி நடந்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார். 

மேலும் முதல் முறை இருப்பை சரி பார்த்தபோது ரூ. 3.6 கோடி குறைவது தெரிய வந்துள்ளது. ஆனால் வங்கியின் RTGS சேனலில் தான் ஏதோ பிரச்சினை என்று நினைத்த வங்கி அதிகாரிகள் மெத்தனமாக இருந்துள்ளனர். ஆனால் தொடர்ந்து இதே போல் பணப் பரிவர்த்தனைகள் நடக்கவே சந்தேகம் வந்துள்ளது. 5 நாட்களில் 84 பணப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளதாகத் தெரிகிறது. 

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், இந்த சைபர் திருடர்களைக் கண்டுபிடிக்க  இன்னபிற ஏஜென்சிகள் துணையை நாடியுள்ளனர். வங்கியின் கோர் பேங்கிங் சிஸ்டம் (CGS), Structured பைனான்சியல் மேனேஜ்மென்ட் சிஸ்டம் (SFMS) ஆகியவற்றின் மூலம் இந்த மோசடி நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. 

தொடர்ந்து விசாரணை மேற்கொண்டிருக்கும் போலீசார் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் முனைப்பாக உள்ளனர். எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றங்கள் நடக்கக் கூடாது என்றால், வங்கிகள் தங்களது பாதுகாப்பு அமைப்புகளை பலப்படுத்த வேண்டும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cyber Fraudsters Hack Bank Server Steal Upto Rs 16 Crore


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->