சிலிண்டர் விலை உயர்வு..மாத தொடக்கத்தில் அதிர்ச்சி அளித்த எண்ணெய் நிறுவனங்கள்!
Cylinder price hike Oil companies shocked at the beginning of the month!
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.மேலும் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப நிர்ணையித்துக் கொள்ள மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. மேலும் அந்தவகையில் ஒவ்வொரு மாதமும் சர்வதேச சந்தை நிலரத்திற்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
அந்த வகையில் இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை உயர்ந்துள்ளது. 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாடு சிலிண்டர் விலை ரூ.5.50 உயர்ந்து ரூ.1,965க்கு விற்பனை செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, வர்த்தக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ. 1,959.50 ஆக இருந்தது.தற்போது அதே சமயம் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமுமின்றி 818.50 ரூபாய்க்கு விற்பனையாகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் 14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் ரூபாய் 818.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
English Summary
Cylinder price hike Oil companies shocked at the beginning of the month!