சர்ச்சை பேச்சு!!! மனிதர்களா இவர்கள்? மயிலாடுதுறை கலெக்டர்.... கனிமொழி கண்டனம்.... - Seithipunal
Seithipunal


மயிலாடுதுறை சீர்காழியை அடுத்துள்ள கிராமத்தில் 3 வயது சிறுமி பாலியல் தொல்லைச் சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் சிறுமி மீதும் தவறு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தனது சர்ச்சைக் கருத்தை தெரிவித்துள்ளார். மயிலாடுதுறையில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறைச் சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்து பயிற்சி முகாம் நடந்தது.


மாவட்ட ஆட்சியர் மகாபாரதி:

இதில் கலந்துகொண்ட மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கூறியதாவது, " மூன்று வயது குழந்தைக்குக் கடந்த வாரம் நடந்த சம்பவத்தைப் பார்த்திருப்பீர்கள். இதில் குழந்தை மீதும் தவறு உள்ளது. இதில் கவனித்துப் பார்த்தால் அது தெரியும். எனக்குக் கிடைத்த தகவலின்படி குழந்தை அந்தச் சிறுவன் முகத்தில் துப்பியுள்ளது, அதுவே இந்தப் பிரச்சனைக்கு முக்கிய காரணமாகும். இரண்டு பேரையுமே பார்க்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்" எனத் தெரிவித்திருந்தார் . இந்தக் கருத்து மக்களிடையே பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. பலரும் இந்தப் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், எம்.பி. யும் திமுக மகளிர் அணி தலைவருமான கனிமொழி தனது கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.

எம்.பி.கனிமொழி:

இதுகுறித்து,அவர் எக்ஸ் பக்கத்தில், " குழந்தைகளுக்கு எதிராக இப்படியான கருத்துக்களைப் பேசும் நபர்கள் எப்படித் தங்களை படித்தவர்கள் என்றும் மனிதர்கள் என்றும் கூறிக் கொள்கிறார்கள். நாம் ஏன் எதையெல்லாம் பொறுத்துக் கொள்ள வேண்டும்? "என ஆவேசமாகத் தனது கேள்வியை முன் வைத்துள்ளார். இது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளதால், தமிழகத் தலைமைச் செயலாளர் முருகானந்தம் மாவட்ட ஆட்சியர் மகாபாரதியை பணியிடமாற்றம் செய்ய உத்தரவிட்டார். அவருக்குப் பதிலாக ஈரோடு மாநகராட்சி ஆணையராக இருக்கும் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் மயிலாடுதுறை ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Controversial speech Are these people human Mayiladuthurai Collector Kanimozhi condemns


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->