சூரியன் கொளுத்துது!!! 125 வருடங்கள் இல்லாத வெயில் பிப்ரவரியில் இப்போதான் காட்டுது.... - Seithipunal
Seithipunal


இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கூற்றுப்படி,கடந்த 125 ஆண்டுகளில் அதிக வெப்பமான ஜனவரி மாதம் என்பது 2024 ம் ஆண்டு ஜனவரி மாதம் தான். அதையும் பின்னுக்குத் தள்ளியது 2025 ம் ஆண்டு ஜனவரி மாதம். இதில் கூட்டாளியாக பிப்ரவரி மாதமும் அதிக வெயிலை வெளியேற்றி இருக்கிறது. இதைத் தொடர்ந்து 1901 ம் ஆண்டிலிருந்து இப்போது வரை பிப்ரவரி மாதத்தில் பதிவான வெயிலைக் கணக்கிட்டு பார்த்தால் 2025 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தான் அதிக வெப்பமானதாக இருக்கிறது. இதன் சராசரி வெப்பநிலை 22.04 ° செல்சியஸ் ஆகும் .


கோதுமை விவசாயிகள்:

இதன் விளைவு கோதுமைப் போன்ற முக்கிய பயிர்களைப் பாதிக்கும். இது மழைக்காலத்தில் மண் ஊரி, குளிர்காலத்தில் துளிர்விட்டு, கோடையில் கோதுமைத் தளிர்ந்து வளரும். வெயில் அதிகமானால் கோதுமை விளைச்சல் பாதிக்கப்படும் என ஆய்வாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இதனால் வடமாநிலங்களிலும், தமிழகம் போன்ற தென் மாநிலங்களிலும் உள்ள கோதுமை விவசாயிகள் பஞ்சத்தால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம்:

மேலும் இந்திய வானிலை ஆய்வு மையம் ராஜஸ்தான், பஞ்சாப், அரியானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், பீகார், உத்தரப்பிரதேசம், வங்காளம், ஜார்கண்ட், சத்தீஸ்கர், ஒடிசா, தெலுங்கானா, ஆந்திரா மற்றும் வடக்கு கர்நாடகா ஆகிய இடங்களில் இயல்பை விட அதிக வெப்ப அலைகள் எதிர்பார்க்கப்படுகின்றன எனத் தெரிவித்திருக்கிறது. இதனால் மக்கள் அனைவரும் வெப்பத்திலிருந்து அவர்களது உடல்களைப் பாதுகாக்க அதிகத் தண்ணீர்,பலச்சாறு,இளநீர், குளிர்பானங்கள் போன்ற குளிர்ந்த பொருட்களை உட்கொண்டால் நல்லது எனத் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The sun has not been there for 125 years and only now showing in February


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->