ரமலான் நோன்பு: இந்தியாவில் நாளை முதல் தொடக்கம்... சவுதியில் இன்று தொடங்கியது!!!
Ramadan fasting Starts tomorrow in India Started today in Saudi Arabia
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையாக ரம்ஜான் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தப் பண்டிகை மற்றும் ரமலான் மாதம் நோன்பு ஆகியவைப் பிறை தெரிவது அடிப்படையிலேயே முடிவு செய்யப்படுகிறது. இதில் உலகில் அனைத்துப் பகுதிகளும் எப்போது பிறைத் தெரிகிறதோ அதை வைத்து நோன்பு தேதி மற்றும் பண்டிகையைக் கொண்டாடுவார்கள். ஒவ்வொரு பகுதிகளிலும் இந்தத் தேதி ஒருநாள் முன்பு அல்லது பின்பு வரை மாறுபடும். மேலும் ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு கடைபிடிப்பது,சூரிய உதயம் முதல் சூரியன் அஸ்தமனம் வரை இவர்கள் உணவு, தண்ணீர் போன்ற எதையும் உட்கொள்ள மாட்டார்கள். இதை மாலை இப்தார் விருந்து வைத்து அந்நாள் விரதத்தை முடிப்பார்கள்.

சவுதி அரேபியா:
சவுதி அரேபியாவில் துமைர், சுதைர் ஆய்வகங்களில் ரமலான் தொடக்கத்தைக் குறிக்கும் பிறைத் தென்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி நேற்று இரவு ரமலான் புனித மாதம் அதாவது பிப்ரவரி 28 ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் உள்ள இஸ்லாமிய மக்கள் நேற்று இரவு முதல் தங்கள் தராவீஹ் தொழுகையைத் தொடங்கியுள்ளனர். மேலும் இன்று மார்ச் 1ஆம் தேதி (சனிக்கிழமை) முதல் நோன்பு கடைப்பிடிக்க உள்ளனர். நேற்று இரவு முதல் ரமலான் புனித மாதம் தொடங்கும் என்பதை அங்குள்ள மத தலைவர்கள் உறுதி செய்தனர்.
இந்தியா:
அதே நேரம் இந்தியா,வங்கதேசம், பாகிஸ்தான் போன்ற பிற நாடுகளில் நேற்று பிறைத் தென்படவில்லை. ஆகையால், இன்று மார்ச் 1ஆம் தேதி வரை இரவு முதல் ரமலான் மாதம் தொடங்கும். மேலும் நேற்று பிறைத் தெரியாததால் இங்கு நோன்பு பின்பற்றுவதும் ஒரு நாள் வரைத் தள்ளிப்போகும். அதாவது ஞாயிற்றுக்கிழமை மார்ச் 2 ம் தேதி முதல் நோன்பு கடைபிடிக்கப்படும். இதுகுறித்துத் தமிழக அரசின் தலைமை காஜி சலாஹுத்தீன் முகமது அய்யூப், பிப்ரவரி 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று பிறைத் தெரியாததால் ரமலான் நோன்பு மார்ச் 2 ஆம் தேதி தொடங்கும் என அறிவித்துள்ளார்.
காஜி சலாஹுத்தீன் முகமது அய்யூப்:
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில், " ஹிஜ்ரி 1446 ஷாபான் மாதம் 29ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஆங்கில மாதம் 28-2-2025 தேதி அன்று மாலை ரமலான் மாத பிறைச் சென்னையிலும் மற்ற மாவட்டங்களிலும் தென்படவில்லை. ஆகையால் ஞாயிற்றுக்கிழமை ஆங்கில மாதம் 2-3-2025 ஆம் தேதி அன்று ரமலான் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்படுகிறது. ஆகையால் ஷபே கத்ர் 27-3-25 வியாழக்கிழமை மற்றும் 28-3-25 வெள்ளிக்கிழமை ஆகிய இரு நாட்களில் மத்தியிலும் இரவில் ஆகும் " எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Ramadan fasting Starts tomorrow in India Started today in Saudi Arabia