இறந்த மூதாட்டி திடீரென எழுந்து வந்ததால் அலறி அடித்து ஓடிய உறவினர்கள்.! - Seithipunal
Seithipunal


உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள மூதாட்டி நர்சன் குர்த் பகுதியை சேர்ந்த ஞான தேவி (வயது 102) என்பவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில், திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

இதனையடுத்து அவரது குடும்பத்தினர் உடனடியாக மூதாட்டியை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு மூதாட்டியை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து நூறு வயதுக்கு மேல் வாழ்ந்த இவரை சிறப்பாக அடக்கம் செய்ய வேண்டும் என அவரின் குடும்பத்தினர் இறுதி சடங்கை மிகவும் பிரமாண்டமாக செய்ய உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் மூதாட்டியின் இறுதி சடங்கில் உறவினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது இறுதி சடங்குக்காக அவரது உடலை தூக்கிய நிலையில், மூதாட்டி திடீரென எழுந்ததால் அருகில் இருந்தவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

மேலும், குடும்பத்தினர் சிலர் அவரைப் பார்த்ததும் மகிழ்ச்சி அடைந்தனர். அதன் பின்னர் அவர் மீண்டும் வீட்டிற்கு திரும்பியுள்ளார். இறந்ததாக கூறி 102 வயதில் மீண்டும் வந்த வந்த நிலையில் குடும்பத்தினர் மட்டுமல்லாமல் கிராமத்தினரும் கொண்டாடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dead old woman suddenly woke up in uthrakhand


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->