இடிந்து விழுந்த விமான நிலைய மேற்கூரை... ஒருவர் உயிரிழப்பு! டெல்லியில் பதற்றம்.! - Seithipunal
Seithipunal


தலைநகர் டெல்லியில் நேற்று இரவு முதல் தொடர் கனமழை பெய்து வருவதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் டெல்லி நகரம் முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

மேலும் சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் அதில் வாகனங்கள் சிக்கி மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். இந்நிலையில் டெல்லி விமான நிலையத்தின் டெர்மினல் ஒன்1 இல் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. 

கனமழை காரணமாக மேற்கூரை இடிந்து விழுந்ததில் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் பல சேதமடைந்து உள்ளே இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். 

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரின் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டிருந்தவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். 

இந்நிலையில் காயமடைந்தவர்களை மீட்க பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது ஒருவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் டெர்மினல் 1 ல் தற்காலிகமாக சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. டெல்லி விமான நிலையம் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delhi airport roof collapse accident one killed


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->