டெல்லி விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து! - Seithipunal
Seithipunal


டெல்லி விமான நிலையத்தில் இருந்த ஒரு விமானத்தில் பராமரிப்பு பணியின் போது தீவிபத்து ஏற்பட்டது:

டெல்லி விமான நிலையத்தில் இருந்த, ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை சேர்ந்த விமானம் ஒன்றில் பணியாளர்களால் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. 

அப்போது ஒரு விமான என்ஜினின் திடீரென்று தீப்பிடித்தது எரியத்தொடங்கியது. இதனை பார்த்த ஊழியர்கள் அதிர்ச்சியடைந்து, அங்கிருந்த தீயணைப்பு கருவி மூலம் தீயை அணைக்க முயன்றனர். 

ஆனால் தீ மேலும் கொழுந்துவிட்டு ஏறிய தொடங்கியதால் இது குறித்து தீயணைப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  

தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் விரைந்து தீயை அணைத்தனர். இது தொடர்பாக விமான நிறுவனம் தெரிவிக்கையில், இந்த சம்பவத்தினால் ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

பராமரிப்பு பணிகளை மேற்கொண்ட பணியாளர்கள் மற்றும் விமானம் பாதுகாப்பாக உள்ளது என தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delhi airport sudden fire accident


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->