வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட டெல்லி முதல்வர் - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


டெல்லியில், சட்டவிரோதமாக பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் முதல்வர் மாளிகைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு, ஒப்படைப்பு நடைமுறையை பின்பற்றாதது தான் காரணம் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

டெல்லியின் விஜிலென்ஸ் துறை, பொதுப்பணித் துறையின் இரண்டு பிரிவு அதிகாரிகள் மற்றும் அரவிந்த் கெஜ்ரிவாலின் முன்னாள் சிறப்புச் செயலர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது குறித்து முதல்வர் அதிஷி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- 

“இந்திய வரலாற்றில் முதல்முறையாக முதல்வர் இல்லம் காலி செய்யப்பட்டுள்ளது. லெப்டினன்ட் ஆளுநர் வி.கே.சக்சேனா மீது பெரிய குற்றச்சாட்டுகளை கூறிய அவர், பா.ஜ.,வின் உத்தரவின் பேரில், முதல்வர் அதிஷியின் உடைமைகளை, முதல்வர் இல்லத்தில் இருந்து வலுக்கட்டாயமாக லெப்டினன்ட் ஆளுநர் அகற்றினார். 

அதுமட்டுமல்லாமல், பாஜக மூத்த தலைவருக்கு முதல்வர் இல்லத்தை ஒதுக்க துணைநிலை ஆளுநர் சார்பில் ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. டெல்லியில் 27 வருடங்களாக புலம்பெயர்ந்த பாஜக, தற்போது முதல்வர் இல்லத்தை கைப்பற்ற நினைக்கிறது என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

delhi cm atishi removed from office


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->