பாஜகவின் மூத்த தலைவர் அத்வானியுடன் டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா சந்திப்பு..!
Delhi CM Rekha Gupta meets senior BJP leader Advani
டெல்லியின் முதலமைச்சர் ரேகா குப்தா இன்று பா.ஜ.க.வின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானியை, டெல்லியில் உள்ள அவருடைய இல்லத்தில் நேரில் சென்று சந்தித்து வாழ்த்துக்களை பெற்றுள்ளார். எல்.கே. அத்வானி பாரத ரத்னா விருது பெற்றவராவார்.
இவருடைய சந்திப்பு குறித்து ரேகை குப்தா வெளியிட்ட செய்தியில் கூறியுள்ளதாவது, தேசிய சேவை, தியாகம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்கான ஒரு தனித்துவ எடுத்துக்காட்டாக அவருடைய வாழ்க்கை அமைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், ஒவ்வொருவருக்கும் ஊக்கம் ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது என கூறியுள்ளார்.

மேலும் அவர் குறிப்பிட்டுள்ளதாவது; ''அவருயை ஆசிகளையும், வழிகாட்டுதல்களையும் பெற்றேன். அவருடைய உடல் ஆரோக்கியத்திற்காகவும், நீண்ட ஆயுளுக்காகவும் கடவுளிடம் வேண்டி கொள்கிறேன். உங்களுடைய ஆசிகளையும், வழிகாட்டுதல்களையும் நாங்கள் எப்போதும் பெற வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.
அத்துடன், டெல்லி முதலமைச்சர் பா.ஜ.க.வின் மற்றொரு மூத்த தலைவரான வி.கே. மல்கோத்ராவையும், நேரில் சந்தித்து அவருடைய வாழ்த்துகளை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Delhi CM Rekha Gupta meets senior BJP leader Advani