மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த டியூசன் ஆசிரியர் - அதிரடி உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்.! - Seithipunal
Seithipunal


நாட்டின் தலைநகரான டெல்லியைச் சேர்ந்த ஒரு மாணவி காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். அந்தப் புகாரில் "கடந்த 2012-ம் ஆண்டு, ஒன்பதாம் வகுப்பு படித்தபோது, ஒரு தனிப்பயிற்சி மையத்திற்குச் சென்றேன். 

அப்போது அங்கிருந்த ஒரு ஆசிரியர், தன்னை பாலியல் வன்கொடுமை செய்தார்" என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து அந்த ஆசிரியர் திருமணம் செய்து கொள்வதாக சிறுமியிடம் கடந்த 2017-ம் ஆண்டு வரை உறுதி அளித்ததுடன் அச்சிறுமியுடன் உடல் ரீதியான உறவை மேற்கொண்டிருந்தார். 

இதற்கிடையில், பாதிக்கப்பட்ட சிறுமி இரண்டு முறை கர்ப்பமாகி அதை கலைத்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில், எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்குமாறு ஆசிரியர் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

இந்த மனுவை நிராகரித்த நீதிமன்றம் இது தொடர்பாக பிறப்பித்த உத்தரவில், '2012 -ம் ஆண்டு சிறுமிக்கு முதல் முறையாக பாலியல் வன்கொடுமை நடந்தபோது, அவரது வயது பதிநான்காக மட்டுமே இருந்துள்ளது. 

இருவருக்கும் இடையேயான உறவு சம்மதத்தின் பேரில் நடைபெற்றதாக கூறும் மனுதாரரின் வழக்கறிஞரின் வாதத்தில் எந்தத் தகுதியும் இல்லை. அந்தச் சிறுமியின் சம்மதம், சட்டத்தின் பார்வையில் சம்மதம் இல்லை. 

மேலும், சம்பந்தப்பட்ட நேரத்தில் அவர் ஆசிரியராக, ஆதிக்கம் செலுத்தும் நிலையில் இருந்தார். ஏனென்றால், அவர் கற்பித்த பயிற்சி மையத்தில் அச்சிறுமி படித்துள்ளார். ஆகவே, ஜாமீன் வழங்குவதற்கான மனு நிராகரிக்கப்படுகிறது' என்று குறிப்பிட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

delhi high court dismissed tution teacher bail pettition


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->