பரபரப்பை ஏற்படுத்தியுள்ள டெல்லி பச்சிளம் குழந்தை திருட்டு சம்பவம் !!
Delhi infant theft incident that has caused a stir
தலைநகர் டெல்லியில் உள்ள தாகூர் கார்டன் மெட்ரோ ரயில் நிலையம் அருகே நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த 1 வயது குழந்தையை தனது தாயின் மடியில் இருந்து திருடி , இரு குற்றவாளிகள், பீகார் மாநிலத்தில் ஒரு பெண்ணிடம் ரூ.3 லட்சத்துக்கு விற்றதாக போலீஸார் தெரிவித்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் மனிஷ் குமார் குப்தா, தொழிலில் தச்சுத் தொழிலாளி மற்றும் மோஹித் திவாரி மற்றும் குழந்தை விற்கப்பட்ட பெண்ணுடன் கைது செய்யப்பட்டனர். மேலும் மேற்கு டெல்லி துணை போலீஸ் கமிஷனர் இதை பற்றி தெரிவிக்கையில், கடந்த ஜூன் 13 அன்று தாகூர் கார்டன் மெட்ரோ நிலையம் அருகே ஒரு வயது குழந்தையை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கடத்திச் சென்றதாக ரஜோரி கார்டன் காவல் நிலையத்தில் தகவல் கிடைத்து உள்ளது.
அந்த நகரில் உள்ள பேரி என்ற தெருவில் பொருட்களை விற்பனை செய்வதாகவும், இரவில் சாலையோரம், தாகூர் கார்டன் மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள டிவைடரில் தூங்குவதாகவும் அந்த பெண் போலீசாரிடம் தெரிவித்து உள்ளார்.
தான் குழந்தையுடன் தூங்கும் போது, யாரோ தன் குழந்தையைப் பிடித்து இழுப்பதை அந்த பெண் உணர்ந்தாள். அந்த பெண் தன்னுடைய குழந்தையை காப்பாற்ற முயன்றாள், ஆனால் குற்றவாளிகள் கைக்குழந்தையைப் பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பிச் சென்று உள்ளனர், என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் டெல்லி காவல்துறை சம்பந்தப்பட்ட சட்ட விதிகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து மனித கடத்தல்காரர்களைப் பிடிக்க ஒரு குழுவை அமைத்து உள்ளது.
இந்த தேடுதல் விசாரணையின் போது, காவல் துறை குழுவானது அப்பகுதியில் உள்ள 100 க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களில் இருந்து காட்சிகளை ஆய்வு செய்தது மற்றும் குற்றம் சாட்டப்பட்ட மணீஷ் குப்தாவை கண்டறிந்தது, பின்னர் அந்த குற்றவாளி கைது செய்யப்பட்டார். இணை குற்றவாளியான மோஹித் திவாரியும் உத்தரபிரதேசத்தில் உள்ள கோண்டாவில் இருந்து காவல் துறையால் கைது செய்யப்பட்டார்.
பீகார் மாநிலம் சீதாமர்ஹியில் வசிக்கும் ஒரு பெண்ணுக்கு குழந்தை விற்கப்பட்டது என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் தெரிவித்தனர். அந்த பெண்ணின் வீட்டில் நடந்த சோதனையின் போது குழந்தை மீட்கப்பட்டது, பின்னர், குழந்தையை மணீஷ் குப்தாவிடமிருந்து அதனை குழந்தை 3 லட்சத்திற்கு வாங்கியதாக அந்த பெண் ஒப்புக்கொண்டுள்ளார் என காவல் துறை தெரிவித்தது.
English Summary
Delhi infant theft incident that has caused a stir