டெல்லி ஜஹாங்கீர்பூர் கலவர வழக்கு - மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்.!
delhi jahangir puri violence issue supreme court
டெல்லி, ஜஹாங்கீர்பூர் பகுதியில் நடைபெற்ற அனுமன் ஜெயந்தி விழாவில் மோதல் ஏற்பட்டது. இதனை போன்றே ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் குஜராத்திலும் ராமநவமி விழாவின் போது மோதல்கள் ஏற்பட்டது.
ராமநவமி மற்றும் அனுமன் ஜெயந்தி விழாவின் போது டெல்லி ஜஹாங்கீர்பூர் உள்பட 7 மாநிலங்களில் மோதல் ஏற்பட்டது. இந்த தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்த கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் விஷால் திவாரி என்பவர் பொது நல மனு தாக்கல் செய்து இருந்தார்.
மேலும், அந்த மனுவில் முன்னாள் நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
x
இந்த மனு நீதிபதி எல்.நாகேஸ்வரராவ் மற்றம் பி.ஆர்.கவாய் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. பின்னர், நீதிபதிகள் இந்த மனுவை தள்ளுபடி செய்ய உத்தரவு பிறப்பித்தனர்.
English Summary
delhi jahangir puri violence issue supreme court