சீமான் வீட்டை முற்றுகையிட்ட த.பெ.தி.க.வினர் கைது!
periyar issue naam tamilar katchi Seeman
தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த கருத்துக்கள் பல்வேறு தரப்பினரின் கடும் எதிர்ப்பை சந்தித்து வருகின்றன.
இச்சர்ச்சையை ஒட்டி, தந்தை பெரியார் பற்றி பேசியது பற்றி ஆதாரம் தேவைப்படுவதாகத் தெரிவித்த தந்தை பெரியார் திராவிட கழக பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன், சீமான் வீட்டுக்குச் சென்று விளக்கம் கேட்பதாக கூறியிருந்தார்.
அதனை முன்னிட்டு, சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டிற்கு போலீசார் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர்.
இந்நிலையில், தந்தை பெரியாருக்கு ஆதரவு கோஷமிடத்துடன், சீமான் வீட்டை முற்றுகையிட முனைந்த தந்தை பெரியார் திராவிட கழக உறுப்பினர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். மேலும், அமைதியின்மை ஏற்படும் வாய்ப்பு காரணமாக பலரையும் கைது செய்துள்ளனர்.
சீமான் தனது கருத்தை திரும்பப் பெறாவிட்டால், தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் அறிவித்துள்ளனர்.
English Summary
periyar issue naam tamilar katchi Seeman