வெறும் ரூ.5000 வரதட்சணை கேட்டு மனைவியை கொன்ற கணவன் சோயப் அகமது! பெரும் அதிர்ச்சி சம்பவம்!
Uttar pradesh husband kill wife for dowry
ரூ.5000 வரதட்சணை தர முடியாததால் கணவன் தனது மனைவியை கொன்ற கொடூர சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உசைன்பூர் கிராமத்தில், கடந்த மாதம் சோயப் அகமது (வயது 25) என்பவருக்கும் தரன்னும் (வயது 22) என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.
அதே கிராமத்தில், கடந்த ஜனவரி 6ஆம் தேதி, மாமியார் வீட்டிற்கு சென்ற சோயப், ரூ.5000 பணம் வழங்க வேண்டும் என்று மனைவியின் குடும்பத்தினரிடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
குடும்பத்தினர் வரதட்சணை வழங்க இயலாத நிலையில், சோயப் கோபமாக வீட்டிற்கு திரும்பி வந்து தனது மனைவியை கொன்றதாக சோயப் அகமது மீது புகார் எழுந்துள்ளது.
பெண்ணின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர். சம்பவம் குறித்து பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் சோயப் அகமது மற்றும் அவரது தந்தை அனீஸ் அகமதுவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Uttar pradesh husband kill wife for dowry