நாட்டில் சைபர் கிரைம்களைத் தடுக்க புதிய வழி - டெல்லி போலீசார் அசத்தல்.! - Seithipunal
Seithipunal


நாட்டில் நடக்கும் சைபர் கிரைம்களைத் தடுப்பதற்காக டெல்லி காவல்துறை 'ட்ரூகாலர் செயலி' நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இது தொடர்பாக டெல்லி காவல்துறை சிறப்பு ஆணையர் சஞ்சய் சிங் தெரிவித்ததாவது:- 

"ட்ரூகாலர் செயலி ஒரு ஐடி சரிபார்ப்பு தளமாகும். தற்போது இந்தியாவில் இணைய வழி மோசடிகள் அதிக அளவில் நடை பெற்று வருகின்றது. அதிலும் குறிப்பாக செல்போன் மூலம் மோசடிகள் மிக அதிக அளவில் நடைபெறுகின்றன.

இந்த மோசடிகளை கட்டுப்படுத்தும் விதமாக டெல்லி காவல்துறை ட்ரூகாலர் செயலியுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் படி, மோசடி அல்லது பிற பதிவு செய்யப்பட்ட சிக்கல்கள் குறித்து புகார்களை பெற டெல்லி காவல்துறையால் வழங்கப்பட்ட தொலைபேசி எண்களை இனி இந்த ட்ரூகாலர் செயலி காண்பிக்கும். 

அதுமட்டுமல்லாமல், எந்த விதமான புகாரிலும் சிக்காத உண்மையான அழைப்பாளர்களுக்கு பச்சை பேட்ஜ் மற்றும் நீல டிக் வழங்கப்பட்டு இவர்களுக்கு அரசாங்க பேட்ஜூம் வழங்கப்படும். மேலும், செல்போன்களில் மோசடி அழைப்புகள் வந்ததுமே மக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு வரும் வகையில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

delhi police agreement with true caller app for stop cyber crime in india


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->