துணை சபாநாயகர் பதவி.. இதுதான் மரபு - ராகுல் காந்தி வலியுறுத்தல்.!
Deputy speaker given opposition says Rahul Gandhi
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பாராளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் தெரிவித்திருப்பதிவது,
மக்களவை துணை சபாநாயகர் பதவியை எதிர்கட்சிகளுக்கு வழங்குவதுதான் மரபு என ராஜ்நாத் சிங்கிடம் தெரிவித்துள்ளேன். மக்களவை துணை சபாநாயகர் பதவியை எதிர்கட்சிகளுக்கு வழங்குவதாக இருந்தால் சபாநாயகர் தேர்தலில் ஆளுங்கட்சி முன்னிறுத்தும் வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்கப்படும்.
மக்களவைத் சபாநாயகர் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள். மக்களவை சார்பாக ஓம் பிர்லாவை மீண்டும் உன்னிடத்தில் பா.ஜ.க திட்டமிட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடியை ஓம் பிர்லா சந்தித்துள்ளார். மக்களவைத் சபாநாயகர் கட்சிகள் உள்பட அனைவரின் ஒரு மித்த ஆதரவுடன் தேர்வு செய்ய தேசிய ஜனநாயக கூட்டணி திட்டம் திட்டி உள்ளது.
துணை சபாநாயகர் பதவியை எதிர் கட்சிகளுக்கு வழங்க தெரிவித்தோம். ஆனால் எந்த பதிலும் கிடைக்கவில்லை. பிரதமர் நரேந்திர மோடி ஆக்கபூர்வமான விவாதத்தை விரும்பவில்லை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
English Summary
Deputy speaker given opposition says Rahul Gandhi