திருப்பதியில் என்னாச்சு? இவ்ளோ கூட்டம்.. தரிசனத்திற்கு பல மணிநேரம்..!!
Devotees Waited Over Several Hours in Tirupati Due to Holidays
ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாடு முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஒவ்வொரு நாளும் வந்து கொண்டுள்ளனர். அதுவும் தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் இந்த ஒரு மாதத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் திருப்பதியில் குவிந்துள்ளது.
ஒரு பக்கம் கத்திரி வெயில், வெப்ப அலை என்று வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கிறது. இன்னொரு பக்கம் கோடை மழை, புயல், வெள்ளம் என்று இரு வேறு விதமான காலநிலை நிலவுகிறது. ஆனால் இது எதையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் திருப்பதியில் தரிசனம் செய்து வருகின்றனர்.
இதையடுத்து பக்தர்களின் கட்டுக்கடங்காத கூட்டத்தால் வைகுண்டம் கியூ காம்ப்ளெக்ஸில் அனைத்து அறைகளும் நிரம்பியுள்ளன. மேலும் அறைகள் நிரம்பியுள்ளதால் பக்தர்கள் பல கி. மீ தொலைவுக்கு நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
இதன் காரணமாக திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய 24 மணி நேரம் முதல் 30 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில் திருப்பதியில் நேற்று முன் தினம் ஒரே நாளில் 4.23 கோடி ரூபாய் காணிக்கை வசூலாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
English Summary
Devotees Waited Over Several Hours in Tirupati Due to Holidays