மதிய உணவில் இறந்து கிடந்த பாம்பு - அங்கன்வாடி குழந்தைகளுக்கு ஆபத்தா? - Seithipunal
Seithipunal


மஹாராஷ்டிரா மாநிலம் சாங்லி மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடியில் குழந்தைகளுக்கு வழங்குவதற்காக பேக் செய்யப்பட்ட மதிய உணவுப் பொட்டலத்தில் இறந்த பாம்பு ஒன்று கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து உடனே உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்குத் தகவல் அளிக்கப்பட்டது. அதன் படி, சாங்கிலி ஜில்லா பரிஷத்தின் துணை தலைமை செயல் அதிகாரி சந்தீப் யாதவ் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கமிட்டி அங்கன்வாடிக்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.

பின்னர் ஆய்வக சோதனைக்காக உணவு பொட்டலத்தை எடுத்து சென்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல், கடந்த மாதம் ஒரு சம்பவம் பீகாரில் நடந்தது.

அதாவது, பீகார் மாநிலம் பங்கா மாவட்டத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் இறந்த பாம்பு கிடந்த உணவை சாப்பிட்டதால் மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. 

இதைத் தொடர்ந்து கடந்த மாதம் நொய்டாவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் ஆன்லைனில் ஆர்டர் செய்த ஐஸ்க்ரீமில் மனித விரலைக் கண்டெடுத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

died snake found anganwadi food in maharastra


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->