விஸ்வகர்மா திட்டத்தை திமுக ஏற்காது - எம்.பி.கனிமொழி..!
dmk avoide viswakarma scheme mp kanimozhi speech
தி.மு.க எம்.பி., கனிமொழி, டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். இதற்கு அவர் பதிலளித்ததாவது:-
"தி.மு.க விஸ்வகர்மா திட்டத்தை முழுமையாக நிராகரித்துவிட்டது. தமிழகத்தின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விஸ்வகர்மா திட்டத்தை தி.மு.க தீவிரமாக எதிர்ப்பதன் காரணத்தை ஏற்கனவே மிகத் தெளிவாக கூறியுள்ளார்.
எனது நிலைப்பாடும் அதுதான். சாதி அமைப்பையும், பெற்றோர்களின் தொழிலையே குழந்தைகள் ஏற்க வேண்டும் எனும் குலத்தொழில்முறையையும் அத்திட்டம் இங்கு மீண்டும் கொண்டுவருகிறது. அதை நாங்கள் ஏற்கமுடியாது." என்றுத் தெரிவித்தார்.
English Summary
dmk avoide viswakarma scheme mp kanimozhi speech