ரிமோட் வாக்குப்பதிவு முறைக்கு திமுக கடும் எதிர்ப்பு..!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் புலம்பெயர் தொழிலாளர்கள் வாக்களிக்க வசதியாக ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரத்தை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. இதற்கான செயல் விளக்கத்தை வரும் ஜனவரி 16ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் வழங்க உள்ளது. ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து ஜனவரி 31ஆம் தேதிக்குள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் தங்களது கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில் ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த வாக்குப்பதிவு முறையில் வாக்காளர் சம்பந்தப்பட்ட தொகுதியை சார்ந்தவரா என்பதை கண்டுபிடிக்க முடியாது. அதேபோன்று சம்பந்தப்பட்ட தொகுதியில் நிரந்தரமாக வசிக்கக் கூடிய வாக்காளர்களின் முடிவுக்கு எதிராக தீர்ப்புகள் அமையும். இந்த முறையில் நேர்மையாக தேர்தல் நடைபெறாது என திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரும் தலைமை சட்ட ஆலோசகரமான வில்சன் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் ஏற்கனவே வட மாநிலத்தவர்களின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில் ரிமோட் வாக்கு பதிவு இயந்திரம் முறை அவர்களுக்கு சாதகமாக கொண்டுவரப்பட்டால் அது தமிழகத்திற்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என திமுகவைச் சேர்ந்த வில்சன் எச்சரித்துள்ளார். பெரும்பாலான மாநில அரசியல் கட்சிகள் இந்த விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK strongly opposes remote voting system


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->