இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்.. கேஸ் சிலிண்டர் விலை ₹100 குறைப்பு.!! - Seithipunal
Seithipunal


மகளிர் தினத்தையொட்டி வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலையை ₹100 குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு குறிப்பாக மகளிருக்கு நிதிச்சுமையை குறைக்கும் வகையில் கேஸ் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து நரேந்திர மோடி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் "இன்று மகளிர் தினத்தையொட்டி எல்பிஜி சிலிண்டர் விலையை ரூ.100 குறைக்க எங்கள் அரசு முடிவு செய்துள்ளது. இது நாடு முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான குடும்பங்களின் நிதிச் சுமையை கணிசமாகக் குறைக்கும், குறிப்பாக நமது நாரி சக்திக்கு பயனளிக்கும்.

சமையல் எரிவாயுவை மிகவும் மலிவு விலையில் வழங்குவதன் மூலம், குடும்பங்களின் நல்வாழ்வை ஆதரிப்பதோடு ஆரோக்கியமான சூழலை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம். இது பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது மற்றும் அவர்களுக்கு ‘எளிதாக வாழ்வதை’ உறுதிசெய்வது என்ற எங்கள் உறுதிப்பாட்டிற்கு ஏற்ப உள்ளது" என பதிவிட்டுள்ளார். 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Domestic gas cylinder rate reduced rs100


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->