நாடு முழுவதும் உள்ள ரயில் சிக்னல் அறைகளுக்கு இரட்டைப் பூட்டு முறை - ரயில்வே துறை.!
Double security lock in railway signal rooms
நாடு முழுவதும் உள்ள ரயில் சிக்னல் அறைகளுக்கு இரட்டைப் பூட்டு முறையை பின்பற்ற ரெயில்வே வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் சரக்கு ரயில் மீது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய விபத்தில் 288 பேர் உயிரிழந்தனர். பலர் பய படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாடு முழுவதும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த ரயில் விபத்து குறித்து சிபிஐ வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
தற்போது தண்டவாள சீரமைப்புகள் முடிவடைந்த நிலையில், 7 ரயில்கள் மட்டுமே நின்று சென்றன. அவை பெரும்பாலும் உள்ளூர் ரயில்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ரயில் நிலையங்களில் அமைந்துள்ள ரயில் கட்டுப்பாட்டு அமைப்புகள், லெவல் கிராசிங்களுக்கான தொலைத் தொடர்பு சாதனங்கள் சிக்னல் அமைப்புகள் ஆகியவை அடங்கிய ரிலே அறைகளுக்கு இரட்டை பூட்டு முறையை பின்பற்றுமாறு ரயில்வே வாரியம் அறிவுறுத்தியுள்ளது. பாதுகாப்பை அதிகரிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
English Summary
Double security lock in railway signal rooms