அரசு மருத்துவமனை ஊழியர்கள் ஜீன்ஸ், மேக்கப் போடக்கூடாது - மாநில அரசு அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், நர்ஸ்கள் உட்பட அனைத்து ஊழியர்களும் ஜீன்ஸ், மாடர்ன் உடை போன்ற ஆடைகளை அணியக் கூடாது என ஹரியானா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து ஹரியானா மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கூறியதாவது, அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கான ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆடை கட்டுப்பாடு அனைத்து ஊழியர்களும் 24 மணி நேரமும் பின்பற்ற வேண்டும்.

அதன்படி வித்தியாசமான ஹேர் ஸ்டைல், அதிகமான நகை அணிகலன்கள் அணிதல், மேக்கப் போடுவதற்கும் தடை விதிக்கப்படுகிறது. அதேபோல் நகங்களை சுத்தமாக ஒட்டி இருக்க வேண்டும்.

மேலும், ஜீன்ஸ், குட்டி பாவாடை கையில்லாத மேலாடை போன்றவற்றை அணியக்கூடாது. மேலும் தங்களது ஆடையில் தங்களின் பெயர், பணி குறித்த பட்டியை அணிந்திருக்க வேண்டும்.

இந்த விதிமுறைகள் அரசு மருத்துவர்கள், நர்சுகள், பாதுகாவலர்கள், ஓட்டுநர்கள் மற்றும் சமையல்காரர்கள் உட்பட அனைவருக்கும் பொருந்தும். மேலும் இதனை மீறுபவர்களுக்கு அன்றைய தினம் அவர்களுக்கு விடுமுறையாக கருதப்படும் என தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dressing rules in Hariyana Govt to hospital employees


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->