ராஜஸ்தானில் திடீர் நிலநடுக்கம்.! ரிக்டர் அளவில் 4.3ஆக பதிவு...!
Earthquake of 4 point 3 magnitude hits Rajasthan Bikaner
ராஜஸ்தானின் பிகானேரில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தின் பிகானேரில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 11:36 மணியளவில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையம் பிகானருக்கு மேற்கே 685 கிலோ மீட்டர் தொலைவில், 10 கிமீ ஆழத்தில் தாக்கியது. மேலும் சுற்றுவட்டார பகுதிகளிலும் நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் சேதங்கள் அல்லது பொருள் சேதங்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இதற்கு முன்பாக கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி ராஜஸ்தானின் வடமேற்கே பிகானேர் பகுதியில் 4.7 ரிக்டர் அளவிலும், மார்ச் மாதம் 26ஆம் தேதி அதிகாலை 2:16 மணியளவில் ராஜஸ்தானின் பிகானேரில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தின் மையம் பிகானருக்கு மேற்கே 516 கிலோ மீட்டர் தொலைவில், 8 கிலோ மீட்டர் ஆழத்தில் தாக்கியது. இதுபோன்று, அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவதால் மக்கள் அதிர்ச்சியிலும், பீதியிலும் உள்ளனர்.
English Summary
Earthquake of 4 point 3 magnitude hits Rajasthan Bikaner